உ.பி., வெறும் 3 தொகுதியில் தான் பாஜக வெற்றி பெறுமா? பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


உத்திரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் 10ஆம் தேதி முதல் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமாக தங்களது தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கட்சித்தாவல் சம்பவங்களும் அரங்கேறி தொடங்கியுள்ளது. குறிப்பாக ஆளும் கட்சியாக உள்ள பாஜகவிலிருந்து அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தனக்ளது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, கட்சியிலிருந்து விலகி சமாஜ்வாதி சமாஜ்வாடி கட்சியில் இணைந்து வருகின்றனர்.

அப்படியாக பாஜகவை சேர்ந்த அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியா மற்றும் 6 பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அகிலேஷ் யாதவ், "உத்தர பிரதேச மாநிலத்தில் 20 சதவீதம் மக்கள் மட்டுமே பாஜகவை தற்போது ஆதரிக்கின்றனர். மீதம் உள்ள 80% மக்கள் சமாஜ்வாதி கட்சியை தான் ஆதரிப்பார்கள்.

இதேபோல் மாநிலத்தில் உள்ள 403 சட்டமன்ற தொகுதிகளில் பாஜக நான்கில் மூன்று தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வெறும் மூன்று அல்லது நான்கு தொகுதிகளில் தான் வெற்றி பெற உள்ளார்கள்" என்று பேசியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

yttarpradesh BSP leader say about bjp


கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,
Seithipunal