Viral video: வரிசையில மாட்டியா? கேள்வி கேட்டவரை கன்னத்தில் அறைந்த YSR எம்.எல்.ஏ.!! 
                                    
                                    
                                   YSR MLA Sivakumar slapped voter video viral
 
                                 
                               
                                
                                      
                                            ஆந்திராவில் நாடாளுமன்ற பொது தேர்தலுடன் சட்டமன்ற பொது தேர்தலும் நடைபெற்று வரும் நிலையில் அங்கு மும்முனை போட்டி நிலவு வருகிறது. ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் தேர்தல் பணியாற்றியுள்ளது.
மத்தியில் ஆளும் பாஜக முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடன் இணைந்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் சந்தித்துள்ளது. அதே பன்று காங்கிரஸ் கட்சியின் ஆந்திர மாநில புதிய தலைவராக  ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஆர் ஷர்மிளா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. 

இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் வாக்குச்சாவடி ஒன்றில் வரிசையில் நிற்காமல் ஆளுங்கட்சியை சேர்ந்த எம்எல்ஏ வாக்களிக்க சென்றதை வாக்காளர் ஒருவர் தட்டிக் கேட்டதோடு சட்டமன்ற உறுப்பினரை கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்ட தெனாலி சட்டமன்ற தொகுதி ஒய்.எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ சிவக்குமார் வரிசையில் நிற்காமல் வாக்களிக்க சென்றதை தடுத்து நிறுத்திய வாக்காளரை கன்னத்தில் அறைந்தார். இதனை தொடர்ந்து வாக்காளர் திருப்பி தாக்க, அருகில் இருந்த எம்.எல்.ஏவின் ஆதரவாளர்களும் வாக்காளரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் பகுதியில் பரபரப்பு தோற்றுக் கொண்டது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 
 
                                     
                                 
                   
                       English Summary
                       YSR MLA Sivakumar slapped voter video viral