மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து..திருமாவளவன் பரபரப்பு பேச்சு.!! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தலை முன்னிட்டு கொளுத்தும் வெயிலிலையும் பொருட்படுத்தாமல்  தேர்தலில் போட்டியிடம் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தனி சின்னத்தில் தான் போட்டு விடுவேன் என்று அறிவித்தார் திருமாவளவன். 1% ஓட்டு இல்லாத காரணத்தினால் பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்தது. பின்னம் நீதிமன்றதனாடி பான சின்னத்தை வாங்கினால் தொல் திருமாவளவன். 

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வீசிக கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தேர்தல் பரப்பில் ஈடுபட்டார். குமாராட்சி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திருமாவளவன் பேசுகையில், மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால், 100 நாள் வேலை திட்டமும் இருக்காது மகளிர் உரிமை தொகையும் கிடைக்காது இட ஒதுக்கீடு நிறுத்தப்படும் ரேஷன் கடைகளும் மூடப்படும் என்று பேசினார். 

கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்களிடையே திருமாவளவன் கருத்தால் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர், திருமாவளவனை ஆதரித்து திமுக நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

women rights cash thirumavalavan speech


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->