இட ஒதுக்கீடு மசோதா || அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் ஒலித்த ஒருமித்த குரல்! - Seithipunal
Seithipunal


நாளை முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் அதற்காக அனைத்து கட்சிகள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பியூஸ் கோயல், பிரகலாத் ஜோஷி ஆகியோர் முன்னிலையில் இந்த அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

இந்த அனைத்து கட்சிகள் கூட்டத்தில் ஐந்து நாட்கள் நடைபெற உள்ள சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட உள்ள சட்ட மசோதாக்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மதசார்பற்ற ஜனதா தள கட்சி மற்றும் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியை சேர்ந்த தலைவர்கள் ஐந்து நாட்கள் நடைபெற உள்ள சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அதன்படி நாளை தொடங்கும் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கானாவில் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த கோரிக்கை இது அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Women reservation bill urged to passed in special parliament session


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->