ஓபிஎஸ் மீண்டும் என்.டி.ஏ-வுக்கு வருவாரா? ஓபிஎஸ்ஸை கூட்டிட்டு வாங்க! நைட் மீட்டிங்கில் ஆர்டர் போட்ட அமித்ஷா? அதிர்ச்சியில் இபிஎஸ்!
Will OPS come back to NDA Bring OPS together Did Amit Shah give orders in the night meeting EPS in shock
2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி அரசியல் தீவிரமடைந்துள்ள நிலையில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்.டி.ஏ) இணைய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் மீண்டும் பரபரப்பு எழுந்துள்ளது. இந்த முயற்சியில் பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா நேரடியாகத் தலையிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் என்.டி.ஏ. கூட்டணியை விரிவுபடுத்தும் பணியில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதன்படி, ஓபிஎஸை விரைந்து கூட்டணியில் இணைத்து தேர்தல் பணிகளை வேகப்படுத்த வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு அமித் ஷா அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக தனித்த அரசியல் பாதையில் செயல்பட்டு வந்த ஓபிஎஸின் அடுத்த கட்ட அரசியல் நிலைப்பாடு நீண்ட நாட்களாக கேள்விக்குறியாக இருந்து வந்தது. இந்நிலையில் அவர் மீண்டும் என்.டி.ஏ.வில் இணையும் சாத்தியம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக–பாஜக தரப்பில் கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு கட்சிகளை இணைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமகவும், டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவும் கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், ஓபிஎஸும் அதே பாதையில் வரலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற பாஜக முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் திட்டம், கூட்டணி விரிவாக்கம், பூத் கமிட்டி அமைப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அந்தக் கூட்டத்தில் ஓபிஎஸை கூட்டணியில் இணைப்பது முன்னுரிமை என அமித் ஷா வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஓபிஎஸுக்கு திடீரென அளிக்கப்படும் முக்கியத்துவம் குறித்து அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கணிப்புகள் நிலவுகின்றன. தனித்து செயல்படும் ஓபிஎஸுக்கு பெரிய அளவிலான வாக்கு வங்கி இல்லை என்றாலும், அவர் சசிகலா அல்லது பிற தென் மாவட்ட ஆதிக்கம் கொண்ட தலைவர்களுடன் இணைந்தால், குறிப்பாக முக்குலத்தோர் சமூக வாக்குகளில் தாக்கம் ஏற்படுத்தலாம் என மதிப்பிடப்படுகிறது. அது அதிமுக–பாஜக கூட்டணிக்கு சவாலாக அமையக்கூடும் என்ற கணிப்பும் முன்வைக்கப்படுகிறது.
இதனாலேயே தேர்தலுக்கு முன்பாக ஓபிஎஸை கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக தீவிரமாக முயற்சி செய்கிறது என கூறப்படுகிறது. மேலும் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்தையும் கூட்டணியில் இணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
எனினும், இந்த தகவல்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளால் உறுதிப்படுத்தப்படவில்லை. ஓபிஎஸின் அடுத்த அரசியல் நகர்வு என்ன? அவர் உண்மையிலேயே என்.டி.ஏ.வில் இணைவாரா? அல்லது தனித்த பாதையிலேயே தொடர்வாரா? என்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்க வரவிருக்கும் நாட்கள் முக்கியமானதாக இருக்கின்றன.
English Summary
Will OPS come back to NDA Bring OPS together Did Amit Shah give orders in the night meeting EPS in shock