ஆட்சியை பிடிப்பது யார்? திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்டத்திலேயே இல்லாத தவெக! வெளியான புதிய சர்வே! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வோட்வைப் ‘வோட் டிராக்கர்’ வெளியிட்டுள்ள சமீபத்திய கருத்துக் கணிப்பு முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த கணிப்பின் படி, திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளுக்கிடையே கடுமையான போட்டி நிலவி வருவதாகவும், அதிமுக கூட்டணிக்கு லேசான முன்னிலை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சர்வேயின் கணிப்பின்படி, அதிமுக கூட்டணி 115 முதல் 125 இடங்கள் வரை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் திமுக கூட்டணி 104 முதல் 114 இடங்கள் வரை மட்டுமே பெறும் என கூறப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு 2 முதல் 8 இடங்கள் வரை கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 234 தொகுதிகள் உள்ள தமிழ்நாட்டில் ஆட்சியை அமைக்க 117 இடங்கள் தேவைப்படும் நிலையில், அதிமுக கூட்டணி அந்த இலக்கை எட்டும் வாய்ப்பில் இருப்பதாக இந்த கருத்துக் கணிப்பு சுட்டிக்காட்டுகிறது. இருப்பினும், இரு கூட்டணிகளுக்கிடையே வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருப்பதால், இறுதி முடிவு எதுவாகவும் மாறக்கூடிய சூழல் நிலவி வருகிறது.

முன்னதாக வெளியான சில கருத்துக் கணிப்புகளில் திமுக முன்னிலையில் இருந்த நிலையில், தற்போது அதிமுக முன்னிலை பெற்றுள்ளதாக கூறப்படுவது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், அக்னி நியூஸ் சர்வே போன்ற சில கருத்துக் கணிப்புகள் திமுகக்கு பெரிய வெற்றி கிடைக்கும் என வேறுபட்ட மதிப்பீடுகளையும் வழங்கியுள்ளன.

இதனால், இந்த தேர்தலில் தெளிவான முன்னிலை எவருக்கும் இல்லாமல் கடும் போட்டி நிலவி வருவது உறுதியாகிறது. இறுதி முடிவு வாக்காளர்களின் மனநிலையும், கடைசி நேர தேர்தல் பிரச்சாரங்களும் தீர்மானிக்கும் என்பதில் அரசியல் ஆய்வாளர்கள் ஒருமித்த கருத்தில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Who will take power A fierce contest between DMK and AIADMK There is no doubt that the game is over New survey released


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->