இன்று மைதானத்தில் விசில் தடை… நாளை கண்டக்டருக்கும் மாற்றமா? - ஆதவ் அர்ஜுனா கிண்டல் - Seithipunal
Seithipunal


ஐசிசி நடத்தும் 2026 டி20 உலகக்கோப்பை தொடரில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான்–நியூசிலாந்து போட்டி எதிர்பாராத சர்ச்சைக்கு காரணமானது. போட்டியை காண வந்த ரசிகர்கள் மைதானத்திற்குள் ‘விசில்’ எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாக, சமூக வலைதளங்களில் கடும் விவாதம் வெடித்தது.

இந்தத் தடை ஐசிசி அல்லது பிசிசிஐ அறிவிப்பு அல்ல; பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக சென்னை காவல்துறையினரின் முடிவு என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் விளக்கமளித்தது.

ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் சின்னம் ‘விசில்’ என்பதால் அரசியல் காரணத்திற்காகவே திட்டமிட்டு தடை விதிக்கப்பட்டதாக சிலர் குற்றம்சாட்ட, விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள மற்ற உலகக்கோப்பை போட்டிகளுக்கும் ‘விசில்’ தடை அமலில் இருக்கும் என, தடைசெய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில் அதிகாரப்பூர்வமாக ‘விசில்’ சேர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கடுமையாகப் பதிலளித்து, “இன்று விசிலுக்கு தடை போடுவாங்க... நாளைக்கு கண்டக்டரின் விசிலையும் மாற்றுவாங்க... போலீஸ்கிட்டிருந்தும் விசில் பிடுங்கிவாங்கலாம்... ஆனா எங்க பசங்க விசில் இல்லாம கையாலேயே சத்தம் போடுவாங்க!” எனக் கிண்டலாக விமர்சித்துள்ளார்.

சேப்பாக்கத்தில் ‘விசில்’ ஒலிக்குமா, இல்லையா என்ற கேள்வி தற்போது கிரிக்கெட்டைக் கடந்து அரசியல் மேடையிலும் எதிரொலித்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Whistle ban ground today Will it change tomorrow conductor Adhav Arjuna teases


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->