செய்கூலி, சேதாரமில்லா நகை விற்பனை.. இல்லத்தரசிகளே மிஸ் பண்ணிடாதீங்க.! எம்.பி பிறந்தநாளில் ஸ்பெஷல் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தற்போதைய மதுரை நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினராக எழுத்தாளர் சு.வெங்கடேசன் இருந்து வருகின்றார். இவர் ஒரு தமிழ் புதின எழுத்தாளர் ஆவார். இவர் எழுதிய காவல் கோட்டம் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது தான் கடந்த 2012 வெளியாகிய அரவான் திரைப்படம்.

வெங்கடேசன் எம்பி நிறைய கவிதைகள் மற்றும் கட்டுரைகள், சிறு, குரு நாவல்கள் பலவற்றை எழுதி இருக்கிறார். அத்துடன் இவருக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரை தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தற்போது அந்த தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகின்றார்.

இவர் தனது சமூக வலைதள பக்கத்தின் மூலமாக தனது ரசிகர்களுடன் மற்றும் தொகுதி மக்களுடன் தொடர்பில் இருந்து வருகின்றார். அத்துடன் தொகுதி மாணவர்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகள் பற்றி அடிக்கடி கல்வி அமைச்சகத்திற்கு கோரிக்கைகளை விடுத்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய நிலையில், இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு இவரின் தீவிர ரசிகர் ஒருவர் தன்னுடைய நகை கடையில் வரும் மார்ச் 15, 16 மற்றும் 17 உள்ளிட்ட தேதிகளில் நகை வாங்குபவர்களுக்கு செய்கூலி, சேதாரம் இல்லாமல் விற்பனை செய்யப்படும் என்று போஸ்டர் அடுத்து திண்டுக்கல் மாவட்டம் முழுதும் ஒட்டி இருக்கின்றார். இந்த போஸ்டர்கள் தற்போது புகைப்படங்களாக சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

wages without selling gold in dindukkal for su vengatesan mp birthday special


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->