இருதரப்பினரிடையே சாதிய மோதல்.. துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறை.!  - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் திருச்சுழி அருகே இரு தரப்பினருக்கும், இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக சுற்றுவட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் திருச்சுழி அருகே பரளச்சியில் இருக்கும் அவருடைய சிலைக்கு செங்குளம் என்ற கிராமத்தில் இருந்து ஒரு பிரிவினர் தங்களுடைய வாகனங்களில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு கூச்சலிட்டு கொண்டே ஊர் திரும்பி இருகின்ற்னர். 

அப்போது எம்.ரெட்டியபட்டி அருகே சென்றபோது மற்றொரு பிரிவினர் அவர்கள் சென்ற வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகின்றது. இதனை தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறையினர் இருபிரிவினரையும் அப்புறப்படுத்தி இருக்கின்றனர். மேலும் தொடர்ந்து அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் பொருட்டு காவல்துறையின் வஜ்ரா வாகனம் மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

viruthunagar veerapandiya kattapomman issue


கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
Seithipunal