பேரறிவாளன் விடுதலை.. உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மனதார வரவேற்கிறேன்.. விஜயகாந்த்.!! - Seithipunal
Seithipunal


பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மனதார வரவேற்கிறேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள்  பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 31 ஆண்டுகளாக  சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மனதார வரவேற்கிறேன்.

தனது பாதி காலத்தை  சிறையிலேயே அவர் அனுபவித்து விட்ட நிலையில் பேரறிவாளனின் விடுதலை அவரது தாயார் அற்புதம்மாளின் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. அற்புதம்மாளின் விடா முயற்சியால் இன்று  தனது மகனை மீட்டெடுத்துள்ளார். அவருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

 பேரறிவாளனின் தண்டனை காலத்தை மேலும் நீட்டிக்காமல் அவரை விடுதலை செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும் தேமுதிக சார்பில் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்‍.

அதேபோல் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட மேலும் 6 பேரையும் விரைவில் விடுவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்‍ என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijayakanth says about perarivalan release


கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?
Seithipunal
--> -->