விஜயதாரணி நன்றியே இல்லாத பெண்!...சீமான் அரசியலில் நீடிக்க முடியாது - ஈவிகேஎஸ் இளங்கோவன் காட்டம்! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியை விட்டு விஜயதாரணி சென்றது எங்கள் கட்சிக்குத்தான் நல்லது என்றும்,  விஜயதரணிக்கு காங்கிரஸ் நிறைய செய்தும் அவர் கட்சிக்கு நன்றி இல்லாமல் உள்ளதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், பாஜகவில் இணைந்த பிறகு விஜயதாரணி காணாமல் போய்விட்டதாக நினைத்தேன். காங்கிரசில் அவருக்கு அதிக மரியாதை கொடுத்து வைத்திருந்தோம். அதை உதறிவிட்டுப் போனார். ஒருவிதத்தில் விஜயதாரணி காங்கிரசை விட்டுப் போனது கட்சிக்கு நல்லது என்றும், அவர் ஒரு கலகம் செய்யும் பெண்மணி என்பதால் தேவை இல்லாமல் ஏதேனும் சிண்டு மூட்டி விடுவார். ஒரு கட்சிக் கட்டுப்பாட்டுடன் செயல்படமாட்டார். அவர் கட்சியை விட்டுச் சென்றது எங்களுக்கு நல்லதுதான் என்று கூறினார். 

மேலும் விஜயதாரணிக்கு காங்கிரஸ் நிறைய செய்தும் அவர் கட்சிக்கு நன்றி இல்லாமல் இருந்துவிட்டார் என்றும், அவர் காங்கிரஸில் தொடர்ந்திருந்தால் கட்சிக்குப் பெரிய தலைவலியாக இருந்து இருப்பார் என்று கூறிய இளங்கோவன், பாஜக பெரிய அளவில் வளராத காலத்திலிருந்தே கட்சியில் இருக்கும் பொன் ராதாகிருஷ்ணன் உடன் விஜயதாரணியை ஒப்பிடுவது தவறு என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவில் 90% தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியுடன் தான் இருக்கிறார்கள். மாறாக அதிமுகவின் செயல்பாடு சரியாக இல்லாத காரணத்தால் அதன் வாக்கு வங்கி குறைந்துவிட்டதாக தெரிவித்தார். மேலும், சீமான் மீது எனக்கு ஒரு பாசம் இருக்கிறது என்று கூறிய இளங்கோவன், அவரிடம் ஒரு நிலையான கொள்கை இல்லாததால் அவரால் அரசியலில் நீடிக்க முடியாது என்று கூறினார். 

 

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijayadharani is an ungrateful woman Seeman can not last in politics EVKS Ilangovan Kattam


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->