விஜய் களமிறக்கிய எதிர்பாராத 3வது அணி? விஜய்–ஓபிஎஸ்–டிடிவி கூட்டணி! பயங்கர பிளான்! அதிர்ச்சியில் இபிஎஸ்! - Seithipunal
Seithipunal


2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றி கழகம், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் (அமமுக) ஆகியவை கூட்டணி அமைக்க அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது. இந்த கூட்டணி உருவானால், குறிப்பாக தென் தமிழகத்தில் அதிமுக–பாஜக கூட்டணிக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக அமையும் என மதிப்பிடப்படுகிறது.

டிடிவி தினகரன் இந்த தேர்தலில் குறைந்தபட்சம் 10 எம்எல்ஏக்களை வெல்ல வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளதாகவும், அதனை அடைவதற்காக நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைப்பதில் தீவிரமாக காய் நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு கிடைத்த வாக்குகளில் சுமார் 18 சதவீதம் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனின் பங்களிப்பால் கிடைத்ததாக அரசியல் கணக்குகள் சொல்கின்றன.

இவர்கள் இருவரும் அதிமுகவை எதிர்த்து தமிழக வெற்றி கழகத்துடன் இணைந்தால், தென் தமிழகத்தில் முக்கியமான முக்குலத்தோர் வாக்குகள் அதிமுகவிலிருந்து விலகி தவெகவுக்கு நகர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய் சரியான தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து போட்டியிட்டால், தென் தமிழகத்தில் வெற்றியை பதிவு செய்யும் சூழல் உருவாகலாம் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையில், பாஜக கூட்டணிக்குள் உள்ள அதிமுக–அமமுக இடையேயான உரசல் உச்சத்தை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று கூறி, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இருவரும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறினர். அதனைத் தொடர்ந்து, பாஜக தலைவர் அண்ணாமலை டிடிவி தினகரனை சந்தித்து மீண்டும் கூட்டணிக்கு அழைத்ததாக தகவல் வெளியானாலும், டிடிவி தனது நிலைப்பாட்டை மாற்ற மறுத்துள்ளார்.

மேலூர் தொகுதியில் விஜய் வெற்றி பெறக்கூடும் என்றும், நாடார் சமூகத்தின் ஆதரவு இருந்தால் திருநெல்வேலி போன்ற தொகுதிகளில் முயற்சி செய்யலாம் என்றும் அரசியல் கணிப்புகள் வெளியாகி வருகின்றன. பாமகவும் தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் இருந்தாலும், பாமகவை எந்த விலையையும் கொடுத்து அதிமுக கூட்டணியில் தக்கவைக்க எடப்பாடி பழனிசாமி முயற்சிப்பார் என கூறப்படுகிறது.

ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இருவரும் விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக முன்வைத்து கூட்டணி அமைத்தால், அந்த அணிக்கு குறைந்தது மூன்றாவது இடம் உறுதியாகும் என்றும், அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கியை கணிசமாக உடைக்க முடியும் என்றும் அரசியல் நிபுணர்கள் கணிக்கின்றனர். இதன் விளைவாக, திமுக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பு மேலும் வலுப்படும் என்றும் அரசியல் களத்தில் பேசப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay unexpected 3rd team Vijay OPS TTV alliance Terrible plan EPS in shock


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->