ஈரோடு பொதுக்கூட்டம் சிக்கல்: இந்து அறநிலையத்துறை நிலம்; செங்கோட்டையன் விளக்கம்!
vijay TVK Sengottaiyan erode meet
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய்யின் அடுத்த மக்கள் சந்திப்புக் கூட்டம் ஈரோட்டில் வரும் டிசம்பர் 18ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இட அனுமதியில் சிக்கல் நீடித்து வந்தது. கரூரில் நடந்த கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததையடுத்து, தமிழகத்தில் தவெக கூட்டங்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தவெக அமைப்புச் செயலாளராக ஈரோட்டில் விஜய்யின் கூட்டத்தை நடத்த தீவிரமாக முயன்று வருகிறார்.
செங்கோட்டையன் விளக்கம்:
இந்நிலையில், இன்று (டிசம்பர் 12) விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே பிரசாரக் கூட்டத்திற்கான இடத்தை ஆய்வு செய்த செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார்.
தேதி உறுதி: விஜய், டிசம்பர் 18ஆம் தேதி காலை 11 மணி முதல் 1 மணி வரை விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே உள்ள இடத்தில் பிரசாரம் செய்ய உள்ளார்.
நிபந்தனைகள் ஏற்பு: அரசு அலுவலர்கள் கூறும் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்று, அதற்கான ஏற்பாடுகளைத் தவெக செய்து வருகிறது.
அறநிலையத்துறை: "விஜயபுரி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் விஜய் பிரசாரம் செய்ய எந்தவித தடையும் இல்லை" என்றும், அறநிலையத்துறை கடிதம் கொடுத்தது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட ஆலயத்திற்குத் தெரியப்படுத்தவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், "மக்களால் எதிர்காலத்தில் அரியணையில் அமர்த்தப்பட போகிற தலைவர் விஜய்யை முதலமைச்சராக ஏற்றுக் கொள்ளும் யாராக இருந்தாலும் கூட்டணிக்கு வரலாம், அன்போடு அரவணைத்து ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம்" என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.
English Summary
vijay TVK Sengottaiyan erode meet