நடிகர் விஜய் இயக்கத்தின் வேட்பாளர்கள் இத்தனை பேர் வெற்றியா?! - Seithipunal
Seithipunal


9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் போட்டியிட்ட 51 பேர் வெற்றி பெற்றுள்ளதாக விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தகவல் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கும், விடுபட்ட 9 மாவட்டங்களுக்கும் கடந்த 6 மற்றும் 9 ஆம் தேதி இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்தது.

இந்நிலையில், இன்று காலை முதல் நடைபெற்ற இந்த உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 

தற்போது வரை (மாலை 6.30) மொத்தம் உள்ள 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக கூட்டணி 92 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி 5 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. தனித்துப் போட்டியிட்ட பாமக ஓரிடத்தில் முன்னிலை பெற்று உள்ளது. . 

இதேபோல், மொத்தமுள்ள ஒன்றிய கவுன்சிலர் 1381 இடங்களில், திமுக கூட்டணி 311 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி 41 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. தனித்து போட்டியிட்டு உள்ள பாமக 10 இடங்களிலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இரண்டு இடங்களிலும், சுயேச்சை வேட்பாளர்கள் 26 இடங்களிலும் முன்னிலை பெற்று உள்ளனர். தேமுதிக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்தில கூட முன்னிலை பெறவில்லை. 

இதில், வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் போட்டியிட்ட 51 பேர் வெற்றி பெற்றுள்ளதாக, அந்த இயக்கத்தின் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தகவல் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VIJAY IYAKKAM 51 CANDIDATE WIN


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->