குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் : பாஜக வேட்பாளருக்கு பகுஜன் சமாஜ் ஆதரவு - மாயாவதி.! - Seithipunal
Seithipunal


தற்போதைய துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் இந்த மாதம் 10-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்டு மாதம் 6-ம் தேதி நடக்கிறது. 

துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் எம்.பி.க்கள். மட்டுமே வாக்களிப்பார்கள். பாராளுமன்றம் மற்றும் மேல்சபையைச் சேர்ந்த 788 எம்.பி.க்கள் வாக்களிக்க உள்ளனர். எம்.பி.க்கள் மட்டுமே வாக்களிப்பதால் ஓட்டுப்பதிவு பாராளுமன்றத்தில் மட்டுமே நடக்கிறது.

இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாஜக வேட்பாளராக மேற்கு வங்க ஆளுநரான ஜெகதீப் தங்கரும், எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மார்கரெட் ஆல்வாவும் போட்டியிடுகின்றனர். 

இந்த நிலையில் துணை குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு தனது கட்சி ஆதரவளிக்கும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். ஏற்கெனவே நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலிலும் பகுஜன் சமாஜ் கட்சி பாஜக வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vice President election mayavati support to BJP


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->