#BREAKING வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து வழக்கில்.. சற்றுமுன் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!! - Seithipunal
Seithipunal


கடந்த மார்ச் 30ம் தேதி துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதில் ரூ. 10.5 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. அடுத்த 2 நாட்களுக்கு பிறகு மொத்தமாக ரூ. 11.53 கோடி பணம் வேலூரில் உள்ள துறை முருகனுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 10ம் தேதி வருமானவரித்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல்துறையினர், கதிர் ஆனந்தன் மற்றும் 2 திமுக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருந்ததால் வேலூர் பாராளுமன்ற தொகுதி மற்றும் அந்த மாவட்டத்தில் உள்ள ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நிறுத்தி வைக்கும்படி தமிழக தேர்தல் ஆணையம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்ததாக தகவல் வெளியாகியது. 

இதன் அடிப்படையில் வேலூர் மாவட்டத்திற்கு மட்டும் தேர்தலில் நிறுத்தி வைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் சார்பாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகிய நிலையில், வேலூர் மக்களவை தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க. சார்பில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி மணிக்குமார் தலைமையிலான அமர்வு விசாரணை வந்தது. 

இந்த வழக்கில் ஏ.சி.சண்முகம் தரப்பு வாதத்தில், தவறிழைக்கும் வேட்பாளர் மற்றும் கட்சி மீதுதான் நடவடிக்கை எடுக்கவேண்டும். வேலூரில் தேர்தல் ரத்து செய்யக்கூடாது என்று தெரிவித்தார்.

வேலூரில் தேர்தலை ரத்து செய்யக்கூடாது என்றால், பணப்பட்டுவாடாவில் ஈடுபடுபவர்களை போட்டியிட அனுமதிக்க வேண்டுமா? மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், தேர்ந்தெடுக்கப்பட்டவரை தான் தகுதிநீக்க வகை செய்கிறது, வேட்பாளரை எப்படி தகுதி நீக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினர் நீதிபதி. நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர். வழக்கு வாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சற்றுமுன் இந்த வழக்கில் இறுதி தீர்ப்பை அறிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், ''வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது செல்லும் என்று தீர்ப்பு வழங்கி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VELLORE ELECTION ISSUE CHENNAI HC FINAL JUDGEMENT


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->