இது துரைமுருகன் பதவிக்கான அழகா? திமுக மீது பாயும் விசிக! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நாயக்கனேரி கிராம ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பட்டியலின தலைவிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்காத விவகாரம் மீண்டும் பூதாகரமாக வெடித்துள்ளது. அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க கோரி திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் திமுக கூட்டணி கட்சியான விசிக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகி கலந்துகொண்டு அமைச்சர் துரைமுருகனுக்கு அறிவுரை வழங்கும் வகையில் அவருக்கு எதிராக பேசியிருப்பது திமுக கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 

அந்த ஆர்பாட்டத்தில் பேசிய விசிக நிர்வாகி கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சி அமைதத்தற்கு விசிகவின் பணி அளப்பறியது. விசிக இல்லையென்றால் திமுக ஆட்சி அமைத்திருப்பது கஷடம் என பேசியுள்ளார். மேலும் நாயக்கனேரி பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவி இந்துமதிக்கு ஏன் இன்னும் பதவி பிரமாணம் செய்து வைக்கவில்லை? என கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்த விவகாரம் குறித்து பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு மற்றும் இடைக்கால தடை பற்றியும் 2 நாட்களுக்கு முன்பு அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுக்கும் வகையில் அறிக்கையாக வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆம்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நாயக்கனேரி பட்டியலின ஊராட்சி மன்ற பெண் தலைவர் இந்துமதிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க அமைச்சர் துரைமுருகன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது துரைமுருகன் வகிக்கும் பதவிக்கும் அவரது அரசியல் அனுபவத்திற்கும் அழகா?  என விசிக நிர்வாகி காட்டமாக விமர்சனம் செய்து இருப்பது திமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை என 3 ன மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க மூத்த அமைச்சராக இருக்கும்  துரைமுருகன் குறித்து விசிகவினர் பேசி இருப்பதும், அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி இருப்பதும் திருமாவளவனுக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் திமுக மீதான திருமாவளவனின் கோபத்திற்கான காரணத்தை கண்டறியும் முயற்சியில் திமுக உடன்பிறப்புகள் இறங்கியுள்ளனர்.

ஏற்கனவே கடலூர் மாநகராட்சி விவகாரத்தில் திமுக விசிக முட்டல் மோதலுக்கு திருமாவளவனை திமுக அமைச்சர் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது துரைமுருகனுக்கு எதிராக விசிக மாநில நிர்வாகி ஒருவர் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vck state executive criticized DMK Duraimurugan


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->