விசிக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு.!! - Seithipunal
Seithipunal


திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு இதே தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. 

மக்களவைத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு முன்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தனி தொகுதி மற்றும் ஒரு பொது தொகுதி ஒதுக்க வேண்டும் என திருமாவளவன் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதனை நிராகரித்த திமுக மீண்டும் விழுப்புரம் மற்றும் சிதம்பரம் என இரண்டு தனி தொகுதிகளை ஒதுக்கியது. 

இதற்கான தேர்தல் ஒப்பந்தத்தில் இரு கட்சி தலைவர்களும் கையெழுத்திட்டுள்ள நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் களமிறங்கப் போகும் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட ரவிக்குமாரும், சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவனும் வரும் மக்களவைத் தேர்தலிலும் போட்டியிட உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VCK candidate list today release


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->