இன்னும் 14 நாட்களில் என் பதவியை ராஜினாமா செய்வேன்! அதிகாரவப்பூர்வமாக அறிவித்த  எம்எல்ஏ! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எச்.வசந்தகுமார், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது 

தேர்தலின் போது நான் வாக்குறுதி அளித்தபடி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். நான் கூறிய அனைத்து மக்கள் நல திட்டங்களும் இன்னும் ஒரு வருடத்துக்குள் நிறைவேற்றி தரப்படும் 

பாராளுமன்றத்தில் தமிழக மக்களுக்காக நாங்கள் குரல் கொடுத்து கொண்டேதான் இருப்போம். மக்களின் குறைகளை கண்டறிந்து நிறைவேற்ற வேண்டியது மத்திய அரசின் கடமை. நிறைவேற்றவில்லை என்றால் நிச்சயம் நாங்கள் தட்டி கேட்போம். சட்டமன்ற உறுப்பினராக உள்ள நான், பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளதால் 14 நாட்களுக்குள் சட்டரீதியாக என் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வேன்.

தமிழகத்தில் போட்டியிட்ட அனைத்தும் தொகுதிகளிலும் திமுக கூட்டணி கட்சிகள்  வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கில்தான் மு.க.ஸ்டாலின் கூட்டணி அமைத்தார் ஒரு தொகுதியை தவிர்த்து அனைத்து தொகுதிகளிலும் வெற்றியும் பெற்றுவிட்டோம்  பா.ஜனதாவை எதிர்ப்பது மட்டுமே எங்கள் நோக்கம் அல்ல. நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஒரே நோக்கம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vasantha kumar resign his mla posting


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->