பிரசாரத்தில் ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு...! வானதி சீனிவாசன் விரைவில் உடல்நலம் பெற வேண்டும்...! - டிடிவி தினகரன் - Seithipunal
Seithipunal


பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், தற்போது கோவை வடக்கு தொகுதி வேட்பாளராக களமிறக்கப்பட்டிருந்தார். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது திடீரென அவருக்கு கால் வலி ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனைத் தொடர்ந்து வழங்கப்பட்ட மருந்துகளுக்கு எதிர்வினையாக உடலில் அலர்ஜி ஏற்பட்டதால், அவரது உடல்நிலை மோசமடைந்து தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும், அவர் இன்னும் மூன்று முதல் நான்கு நாட்கள் வரை மருத்துவர்களின் கண்காணிப்பில் தொடர்ச்சியாக சிகிச்சை பெற வேண்டிய நிலை இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.இதன் காரணமாக, அவர் அடுத்தடுத்த தேர்தல் பிரசாரங்களில் பங்கேற்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்ததாவது," பாஜக மகளிரணி தேசிய தலைவரும், கோவை வடக்கு தொகுதி வேட்பாளருமான வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்".

மேலும் அவர் விரைவில் முழு உடல்நலம் பெற்று மீண்டும் தேர்தல் பணிகளைத் தொடர வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vanathi Srinivasan sudden health decline during campaign May she recover soon TTV Dinakaran


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->