தந்தை கண்முன்னே நடந்த திகில் சம்பவம்...! ரத்த வெள்ளத்தில் சரிந்த மகன்...! - கொலை வழக்கில் திருப்பம் - Seithipunal
Seithipunal


சென்னை தண்டையார்பேட்டை வ.உ.சி. நகரைச் சேர்ந்த நரேஷ்குமார் (28), மீன் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தவர். இவர்மீது புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் கொலை முயற்சி தொடர்பான வழக்கும் நிலுவையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று முன்தினம் நள்ளிரவு, தனது வீட்டின் கதவை தட்டிய நரேஷ்குமார், கதவை திறந்த தந்தை வெங்கடேசன் கண்முன்னே கழுத்து, மார்பு மற்றும் இடுப்புப் பகுதிகளில் தீவிர காயங்களுடன் ரத்தத்தில் மூழ்கியபடி சரிந்து விழுந்தார்.

இந்த திகில் காட்சியால் பதறிய வெங்கடேசன், அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், நரேஷ்குமார் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

விசாரணையில், மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டு கடுமையாக காயமடைந்த நரேஷ்குமார், உயிர் தப்பும் நம்பிக்கையில் வீட்டிற்கு வந்து கதவை தட்டியதும், பின்னர் தந்தை கண்முன்னே உயிரிழந்ததும் தெரியவந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை காவலர்கள் தீவிரமாக ஆய்வு செய்து, கொலையாளிகள் யார் மற்றும் கொலையின் பின்னணி என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் நரேஷ்குமாரின் நண்பர்கள் இருவரை காவலர்கள் பிடித்து விசாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

horrific incident that happened before father eyes Son collapsed pool blood twist murder case


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!


செய்திகள்



Seithipunal
--> -->