பிரதமர் மோடி நலமுடன் வாழ வேண்டி.. பழனிக்கு பாதயாத்திரை செல்லும் வானதி சீனிவாசன்.! - Seithipunal
Seithipunal


கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவான வானதி சீனிவாசன், பாஜகவின் தேசிய மகளிர் தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் இவர் கோவையிலிருந்து பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை மேற்கொண்டு உள்ளார்.

இந்த பாதயாத்திரை குறித்து அவர் கூறியதாவது, பிரதமர் மோடி மற்றும் நாட்டு மக்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டியும், கோவை தெற்கு தொகுதியில் நான் பெற்ற வெற்றிக்காக வேண்டுதலை நிறைவேற்றவும் இந்த பாதயாத்திரை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி நேற்று மாலை ஈச்சனாரி விநாயகர் கோவில் முன்பு தொடங்கிய பாதயாத்திரையில் 50க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

கோவையில் இருந்து புறப்படும் இந்த பாதயாத்திரை பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம் வழியாக சென்று பிப்ரவரி 2ம் தேதி இரவு பழனியை சென்றடைகிறது. பிப்ரவரி 3ம் தேதி காலை பழனி முருகனை தரிசனம் செய்துவிட்டு திரும்புகின்றனர்.

முன்னதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பாத யாத்திரை தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென அவரது வருகை ரத்து செய்யப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vanathi Srinivasan is going on padayatra to Palani


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->