உச்சநீதிமன்றத்தால் கடும் அதிர்ச்சியில் வைகோ.! வெகுண்டெழுந்து வெளியிட்ட அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழகத்தின் அதிமுக மற்றும் திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்திருந்தது.

ஆனால், பாட்டாளி மக்கள் கட்சி மட்டும் 27 சதவீத இட ஒதுக்கீடு  வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தது. இந்த நிலையில், அதற்கான தீர்ப்பு இன்று உச்சநீதிமன்றத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 

வழக்கு குறித்த அனைத்து தரப்பு வாதங்களையும் உச்ச நீதிமன்றம் பதிவு செய்துகொண்டு, இதுகுறித்த வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.

இந்தநிலையில், இன்று இந்த வழக்கின் தீர்ப்பை அறிவித்துள்ள நீதிமன்றம் ஓபிசி பிரிவினருக்கு இந்த வருடம் 50 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த உத்தரவிட முடியாது என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து மதிமுக போது செயலாளர் வைகோ 'மருத்துவக் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு தருமாறு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கின்ற தீர்ப்பு, சமூக நீதிக்கும் இட ஒதுக்கீட்டுக்கும் எதிரான, பெரும் அதிர்ச்சி அளிக்கின்ற தீர்ப்பு ஆகும்.

இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு தொடக்கத்தில் இருந்தே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரான வஞ்சகப் போக்கை மேற்கொண்டு வந்ததற்கு, மதிமுக சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்'. என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vaiko speech about supreme court judgment


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->