மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ள வைகோ..! - Seithipunal
Seithipunal


தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.கவிற்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட்டுள்ளது. இந்நிலையில், இன்று சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நான்கு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளரை பட்டியலை அறிவித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி அங்கம் வகிக்கும் மதிமுகவிற்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த நான்கு தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பங்களை பெற்றோம், அதன் பின் நபர்களை தேர்ந்தெடுத்து தொகுதி நிலவரம் மற்றும் அவர்களுடைய நிலைமை பற்றி கேட்டிருந்தோம் என்று குறிப்பிட்டார்.

அத்துடன், மொடக்குறிச்சி-செந்தில்நாதன் உதயசூரியன் சின்னத்திலும், மதுரை தெற்கு-பூமிநாதன் உதயசூரியன் சின்னத்திலும், கடையநல்லூர் - திமு ராஜேந்திரன் உதயசூரியன் சின்னத்தில், சீர்காழி (தனி) - செந்தில் செல்வன் தனி சின்னத்தில் போட்டியிட உள்ளனர் என்று அறிவித்தார்.

மேலும் இந்த சட்டமண்ட தேர்தலுக்கான பிரச்சாரத்தை வரும் 02-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாகவும் கூறினார். திமுக மற்றும் திமுக கூட்டணியில் அங்கம் வைத்திருக்கக்கூடிய அனைத்து கட்சிகளுக்காகவும் பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளதாகவும்,  திராவிட இயக்கத்தை அண்ணா, பெரியார் கலைஞர், உருவாக்கியிருக்க கூடிய கோட்டைக்கு எந்த சேதமும் ஏற்பட அனுமதிக்க கூடாது, பிரச்சாரத்தில் இதனை முதன்மையாக வைக்க இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

மேலும், திராவிட முன்னேற்ற கழக ஆட்சி தொடர வேண்டும் எனவும், ஒன்றிய அரசு ஓரவஞ்சனையாக செயல்பட்ட போதும் மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை திமுக அரசு தீட்டி உள்ளார்கள் என்றும், இதனை மக்களிடம் கொண்டு செல்வோம், திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெற உங்களின் வாக்குகளை செலுத்துங்கள் என பிரச்சாரம் மேற்கொள்ளஉள்ளதாக கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vaiko Announces Candidates Contesting on Behalf of MDMK


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->