ராமர் ஒரு கட்சியின் சொத்து அல்ல.! இந்தியா கூட்டணியில் இருந்து ஆவேச குரல்.!! - Seithipunal
Seithipunal


பாஜக "அயோதியில் ராமர் கோயில்" கட்டப்படும் என்ற வாக்குறுதியுடன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்ட நிலையில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளதால் வரும் ஜனவரி 22ஆம் தேதி மூன்று அடுக்குகளில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான ராமர் கோயில் மற்றும் அங்கு குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

மிகவும் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த ராமர் கோவிலுக்கு எதிர்காலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை புரிவார்கள் என்பதால் அயோத்தி மாநகரின் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் விமான நிலையம் அமைக்கப்படுகிறது, ரயில் நிலையம் விரிவுபடுத்தப்படுகிறது.

ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு, முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அமைந்துள்ள இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள உத்தவ் தாக்கரே எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை எனவும், அங்கு செல்ல எனக்கு அழைப்பு தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் கடவுள் ராமர் ஒரு கட்சியின் சொத்து அல்ல அனைவருக்கும் சொந்தமானவர் இதை நான் அரசியல் ஆக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

uttavthakre said Ram is not the property of a party


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->