உ.பி., தேர்தல் தள்ளி போகிறதா? நீதிபதி வைத்த வேண்டுகோள்.! - Seithipunal
Seithipunal


ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பாதிப்பில், இந்தியாவைப் பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக 250 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 65 பேர், தலைநகர் டெல்லியில் 64 பேர் ஒமைக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதனையடுத்து தலைநகர் டெல்லியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹரியாணா மாநிலத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் வங்கி, வணிக வளாகம், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு வர தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் முதல் ஊரடங்கு அறிவிப்பாக, மத்தியப் பிரதேசத்தில் இரவு 11 முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக, அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து, உத்திரப் பிரதேசத்தில் நாளை முதல் இரவு 11 முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக, அம்மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலை தள்ளி வையுங்கள் என தேர்தல் ஆணையத்திற்கு, உத்தர பிரதேச அலகாபாத் உயர்நீதிமன்றம் நீதிபதி சேகர் யாதவ் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

மேலும், ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் தேர்தலை ஒத்தி வைக்கலாம் எனவும் தேர்தல் ஆணையத்திற்கு, உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் யாதவ் ஆலோசனை வழங்கி உள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

uttar pradesh election issue hc judge


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->