தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை - நடிகை குஷ்பு கண்டனம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையே நிலவுகிறது என்று பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு கடந்த 23-ம் தேதி இரவு மின்சார ரெயில் புறப்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர், ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறிய மதுபோதையில் இருந்த வாலிபர் ஒருவரை கீழே இறங்கும்படி கூறியுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் பெண் காவலரை கத்தியால் குத்தி உள்ளார். இதனால் தடுமாறிய பெண் காவலர் உயிர் பிழைக்க ரெயிலில் இருந்து குதித்து தப்பித்து ஓடியுள்ளார். இதனால் கடற்கரை ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் இதுவரை குற்றவாளி சிக்கவில்லை. இந்த சம்பவத்திற்கு பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது,

"ஒரு பெண் காவலருக்கே பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. பெண் காவலருக்கே இந்த நிலமை என்றால் சாதாரண பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்கும்? தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையே நிலவுகிறது". என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Unsafe situation for women Tamil Nadu actress Kushboo condemned


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->