உன்னாவ் பாலியல் விவகாரம் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்திய மத்தியரசு!! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேசம் மாநிலம், உன்னாவ் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தன்னை பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சாகர் பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். உன்னாவ் 

அந்த பெண் புகார் அளித்த மறுநாளே அவர் தந்தை மர்மமான முறையில் உயிரிழந்தார். அதன்பின்னர் பாலியல் புகார் குறித்து போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, இதற்காக தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டிற்கு முன் அப்பெண் தர்ணாவில் ஈடுபட்டார் பரப்ரபை ஏற்படுத்தினார்.

இந்தநிலையில், தமது உறவினரை சந்திக்க தனது தாய் மற்றும் வழக்கறிஞருடன் ரேபரேலி சிறைக்கு அந்தப்பெண் சென்றுகொண்டிருந்த காரின் மீது லாரி மோதியது இதில் அந்த பெண்ணின் தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், பாலியல் புகார் அளித்த பெண்ணும், அவரது வழக்கறிஞர் ஆகிய இருவரும்  உயிருக்கு போராடி வருகிறார். காரின் மீது மோதிய லாரி ஓட்டுனர் மற்றும் லாரி உரிமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தற்செயலான விபத்தா அல்லது திட்டமிட்ட செய்யப்பட்ட சதியா என சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து இந்த விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்திரபிரதேச அரசு உத்தரவுவிட்டுள்ளது, இது தொடர்பான வழக்கில் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சாகர் எம்.எல்.ஏ. தற்போது சிறையில் உள்ளார். 

விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்ட பெண் லக்னோவில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணை விமானம் மூலம் டெல்லி எய்ம்ஸ் மருத்துமனையில் அனுமதிக்க கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டிருந்த நிலையில். 

இதையடுத்து, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, விமானம் மூலம் அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துமனைக்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட பெண் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

unnav case women changed to delhi aims hospital


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->