கர்நாடக தேர்தல் எதிரொலி.. ஜூனில் தமிழகம் வருகிறார் அமித்ஷா..!! கூட்டணி கட்சித் தலைவர்களை சந்திக்க திட்டம்..!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநில சட்டமன்ற பொது தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது தேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதலமைச்சர்கள் பாஜக தோல்வி அடைந்ததை வரவேற்று, காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

கர்நாடகா தென்னிந்தியாவில் பாஜக ஆட்சி செய்த ஒரே மாநிலமாக இருந்து வந்த நிலையில் தற்போது ஆட்சியை காங்கிரஸிடம் பறிகொடுத்துள்ளது. பல அரசியல் கட்சித் தலைவர்கள் கர்நாடக மாநில சட்டமன்ற பொது தேர்தல் முடிவு எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா அடுத்த மாதம் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. எதிர்வரும் நாடாளுமன்ற பொது பொதுத் தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சி தலைவர்களுடன் வியூக அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது.

குறிப்பாக திமுகவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் நோக்கில் இந்த பயணம் மேற்கொள்ள உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக அங்கம் வகிக்கும் என இரு கட்சித் தலைவர்களும் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் அமித்ஷாவின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அதேபோன்று அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எடப்பாடி பழனிச்சாமி உடன் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக பாஜக தலைவர்களுக்கும் அதிமுக தலைவர்களுக்கும் இடையே உரசல் போக்கு நீடித்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் இருந்து 25 எம்பிக்கள் நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என அண்ணாமலை கூறி வருகிறார்.

தமிழக பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே சமூக வலைதளங்களில் கருத்து மோதல் நீடித்து வரும் இந்த சமயத்தில் அமித்ஷா தமிழகத்திற்கு வரவுள்ளது இரு கட்சி நிர்வாகிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தொகுதி பங்கீட்டில் இரு கட்சிகளும் சமூகமான முடிவு எடுப்பது கடினம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Union Minister Amit Shah will visit Tamil Nadu in June


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->