அங்க ஒரு வேஷம்.. இங்க ஒரு திட்டம்.. அதிமுகவின் இரட்டை வேடத்தை கிழிக்கும் உதயநிதி.!  - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதா சமீபகாலத்தில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டபோது, அவருக்கு அதிமுக எம்பிக்கள் ஆதரவளித்து ஓட்டு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது, ஆனால், திடீரென்று இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து தற்போது இதே மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டபோது, அதிமுக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது மிகவும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. 

மக்களவையில் மசோதாவை ஆதரித்து ஓட்டு போட்டுவிட்டு மாநிலங்களவை எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது பக்கத்தில் கூறியிருப்பதாவது:- வேளாண் மசோதாவிற்கு மக்களவையில் ஆதரவளித்த அதிமுக அரசு, மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவித்து பேசியிருப்பது பதவிக்காக பாஜகவிற்கு அடிமையாக இருப்பதை அப்பட்டமாக ஏற்றுக்கொள்வது போல் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் போது திமுக உள்ளிட்ட எந்த கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனவும், ஆனால், சிரோமணி அகாலிதளம் எதிர்ப்பு தெரிவித்து அந்தக் கட்சியின் அமைச்சர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்தவுடன் திமுக போன்ற கட்சிகள் இந்த மசோதா அரசியலை கையில் எடுத்ததாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

udhayanithi speech about admk double action


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->