தளபதி டூ தளபதி சந்திப்பு, இளையதளபதி கொந்தளிப்பு.! இது தான் காரணமாம்.!  - Seithipunal
Seithipunal


விஜய் நடித்து வெளிவர காத்திருக்கும் படம் பிகில். அந்த படத்தின் பாடல் வெளியிடு, ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் நடிகர் விஜய் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

இந்நிலையில், மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி அவர்களின் மகள் செல்வி-முரசொலி தம்பதியின் பேத்தியும் மற்றும் பேத்தியும் எழிலரசி - ஜோதிமணி ஆகியோரின் மகளுமான ஓவியாவுக்கு தொழிலதிபர்  ஜெயபிரகாஷ் - பவானி ஆகியோரின் மகன் அக்கினீஸ்வரனுக்கும் நேற்று மலை சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் நிச்சியதார்தம் நடைபெற்றது. 

அந்த விழாவில் அவர் குடும்பத்தை தவிர மிக சிலரே அழைக்கப்பட்டு இருந்தனர். அதில் விஜய்யும் ஒருவராக அழைக்கப்பட்டிருந்தார். நடிகர் விஜய் விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளார். அதன் பின்னர் விஜய்யும் ஸ்டாலினும் சில நிமிடங்கள் பேசிக்கொண்டு இருந்தனர். அவர்கள் எடுத்துக்கொண்ட படம் சமூக வலைத்தளங்களில் பெரிதும் பகிர பட்டு வருகிறது.

இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் பகிர்வதோடு இல்லாமல் விஜய் அரசியலுக்கு தயாராகிவிட்டார் என்று குதூகலமாக இருக்கின்றனர். இந்நிலையில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விஜயுடன் தளபதி ஸ்டாலின் சந்தித்தது, குடும்பவிழாவிற்காக தான். 

இது எதார்த்தமாக தான் நடந்தது. இதனை ரசிகர்களோ, தொண்டர்களோ அரசியலாக பார்க்க வேண்டாம் என ஆவேசமாக கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

udhayanithi says about stalin and vijay meet


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->