ரெய்டு மூலம் திமுகவை மிரட்ட முடியாது! - அமைச்சர் உதயநிதி ஆவேசம்.!! - Seithipunal
Seithipunal


திருவள்ளூரில் திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடலுக்கான ரத்த அணுக்கள் போல திமுகவுக்கான ரத்த அணுக்கள் வாக்குச்சாவடி முகவர்கள் தான். வெற்றிக்காக உழைக்கும் வாக்குச்சாவடி முகவர்கள் திமுகவின் முகம் மட்டுமல்ல தலைவரின் முகம். 

திமுக அங்கம் வைக்கும் இண்டியா கூட்டணி வெற்றிக்காக பாஜகவின் உண்மையான முகத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். ரெய்டு மூலம் திமுகவை மிரட்ட முடியாது. திமுகவின் திட்டங்களை காப்பியடித்து பாஜக காலை உணவு திட்டத்தை அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்துகிறது. மத்தியில் மக்களுக்கான ஆட்சி நடைபெறவில்லை. கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சி நடைபெறுகிறது. பாஜகவை கண்டு திமுகவின் கிளை செயலாளர் கூட பயப்பட மாட்டார்கள்" என ஆவேசமாக பேசி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Udhayanithi said DMK cannot be intimidated by raid


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->