கெ.ம.தே.க-வை புறக்கணித்த உதயநிதி.. கூட்டணியில் புது பூகம்பம்.. நிர்வாகிகள் அதிரடி முடிவு.? - Seithipunal
Seithipunal


தர்மபுரி தொகுதியில் வன்னியர்கள் பெரும்பான்மையாக வசித்து வரும் சூழலில் குறிப்பிடத் தகுந்த அளவுக்கு வெள்ளாளர் சமுதாயத்தினரும் இருந்து வருகின்றனர். வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில் இவ்விரு சமுதாயங்களும் இருப்பதால் இந்த தொகுதி அரசியல் கட்சிகளுக்கு சவால் நிறைந்ததாகவே இருந்து வருகிறது. 

இந்த நிலையில் தர்மபுரி திமுக வேட்பாளர் மணியை ஆதரித்து ஒடசல்பட்டி கூட்ரோடு, பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் தீவிர வக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

திமுக வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என உதயநிதி பேசுவதற்கு முன்பு திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளின் பெயரை உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டு பேசினார். 

அப்போது திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொங்கு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகளின் பெயர்களை குறிப்பிடவில்லை. அவர் பங்கேற்று பரப்புரையின் போது கொங்கு மக்கள் தேசிய கட்சியின் கொடிகள் பெரும்பாலான இடங்களை ஆக்கிரமித்து இருந்தன. 

ஆனால் உதயநிதி ஸ்டாலின் கொங்கு மக்கள் தேசியக் கட்சியின் நிர்வாகிகளின் பெயரை குறிப்பிடாமல் தவித்து இருப்பது கட்சி நிர்வாகிகளை அதிருப்தி அடையச் செய்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ளும் பரப்புரை கூட்டங்களில் அதிக எண்ணிக்கையில் கொங்கு மக்கள் தேசிய கட்சி கொடிகள் ஏந்தியவாறு தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள். 

அதைப் பார்த்தாவது கொங்கு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகளின் பெயரை அவர் குறிப்பிட்டு இருக்கலாம். ஆனால் அவர் அதனை தவிர்த்து உள்ளார். சுமார் 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் கொங்கு மக்கள் தேசிய கட்சி குறித்து அவர் பேசாமல் தவித்து இருப்பதால் தேர்தல் பணிகளில் அக்கட்சி நிர்வாகிகள் ஈடுபட போவதில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கொங்கு மண்டலத்தில் திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Udhayanithi avoid KMDK in campaign


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->