கரூர் மாநகராட்சி தெருகளுக்கு உதயநிதி பெயர்..!! அதிமுக கவுன்சிலர்கள் மவுன விரதம்..!! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக அதிமுக நிர்வாகிகள் கடத்தி தாக்கப்படும் சம்பவம் அரங்கேறி வருகிறது. இதன் காரணமாக கரூர் மாவட்ட அரசியலில் பெரும் பரபரப்பு உண்டாகியுள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மகனும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரனுமான உதயநிதி ஸ்டாலின் திமுகவின் இளைஞர் அணி பதவிக்கு இரண்டாவது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் கரூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 36 ஆவது வார்டு திமுக கவுன்சிலர் வசுமதி "கரூர் மாநகராட்சிக்குட்பட்ட 36 வது வார்டில் உள்ள தெருக்களுக்கு மணக்களம் தெரு என்று பதிவேட்டில் உள்ளது. அதனை நீக்கிவிட்டு உதயநிதி முதல் தெரு, உதயநிதி இரண்டாம் தெரு, உதயநிதி மூன்றாம் தெரு என பெயரை மாற்ற வேண்டும்" என தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு திமுகவை சேர்ந்த 46 கவுன்சிலர்களும் ஆதரவு தெரிவித்தனர். 

அதேபோன்று அதிமுகவை சேர்ந்த இரு உறுப்பினர்களும் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்காமல் மவுனமாக அமர்ந்து இருந்தனர். இதனால் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த மூன்று நாட்களாக கரூர் மாவட்டத்தில் அதிமுக நிர்வாகிகளும் ஆதரவாளர்களும் கடத்தப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவம் அதிமுக கவுன்சிலர்களை கதிகலங்க செய்திருக்கும் பொதுமக்கள் முணுமுணுக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Udayanidhi name for Karur Corporation Streets


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->