தேர்தல் களத்தில் எங்கே தவெக விஜய்? ஓடி ஒளிகிறாரா? இல்லை அதுதான் வியூகமா?!
TVK Vijay election campaign issue
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026 களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் மாநிலம் முழுவதும் சூறாவளிப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்திற்கு அனுமதி கிடைப்பதே பெரும் போராட்டமாக இருப்பதாகவும், அப்படியே அனுமதி கிடைத்தாலும் விஜய் பிரச்சாரத்திற்கு வராமல் ரத்து செய்வதுவமாக இருக்கும் நிலையில், அவரை "தேர்தல் களத்தில் அதிகம் காணப்படாத தலைவர்" (Most Absentee) என்ற விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் சீமான் மற்றும் அண்ணாமலை ஆகியோர் தினமும் 3 முதல் 4 பிரச்சார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வரும் நிலையில், விஜய் மிகக் குறைவான இடங்களிலேயே நேரடியாகப் பிரச்சாரம் செய்துள்ளார். கடந்த வாரங்களில் ஒரு சில நாள் முழுவதும் பிரச்சாரமே செய்யாமலும் இருந்து உள்ளார்
இது விஜய்யின் திட்டமிட்ட மவுனமா அல்லது கட்சியின் வியூகமா எனத் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர். மேடைப் பேச்சுகளை விட சமூக வலைதளங்கள் மற்றும் பூத் கமிட்டி பணிகளுக்கே அவர் முக்கியத்துவம் அளிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் கூட்டம் சேராததால் அவரின் பிரச்சாரம் ரத்து செய்யப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், கடலூரில் நடைபெறவிருந்த அவரது பிரச்சாரமும் 3-வது முறையாகத் தள்ளிப்போனது அவரது ஆதரவாளர்களிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் விஜய் அதிரடி காட்டுவார் என தவெக நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
English Summary
TVK Vijay election campaign issue