சீரடி சாய் பாபா காலடியில் தவெக தலைவர்...! - அரசியல் பயணத்திற்காக 'தளபதி'யின் ஆன்மீக தரிசனம்...! - Seithipunal
Seithipunal


தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்திய சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 23-ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகி, மக்களின் அரசியல் ஈடுபாட்டை வெளிப்படுத்தியது.

விஜய் தலைமையிலான தவெக, 233 தொகுதிகளில் தன்னுடைய வேட்பாளர்களை களமிறக்கி, சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் மட்டும் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு அளித்தது.

தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பல நகரங்களில் விஜய் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு, மக்களிடையே உற்சாகத்தை உருவாக்கினார்.

இந்நிலையில், வரும் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிகளை நிறைவு செய்த விஜய் தற்போது ஆன்மீக பாதையில் கவனம் செலுத்தியுள்ளார்.

நேற்று அதிகாலை திருச்செந்தூர் முருகன் கோவில் சென்று தரிசனம் செய்த அவர், இன்று மராட்டிய மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய் பாபா கோவில் வழிபாட்டில் ஈடுபட்டார்.

சென்னையில் இருந்து தனியார் விமானம் மூலம் மராட்டிய மாநிலத்துக்கு பயணம் செய்த விஜய், அங்கிருந்து கார் மூலம் கோவிலுக்கு சென்றார்.

அவரை நேரில் காண பெருமளவில் திரண்ட ரசிகர்கள் காரணமாக, காவலர்கள் பாதுகாப்பு வளையத்தில் அவரை அழைத்துச் சென்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tvk leader feet Shirdi Sai Baba Thalapathi spiritual darshan political journey


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->