வன்னியர் சாதிக்கு தனி கமிட்டி? டிடிவி தினகரன் பரப்பிய பொய்.! இது கூட தெரியலையா., தலையில் அடித்துக்கொள்ளும் நெட்டிசன்கள்.! 
                                    
                                    
                                   TTV WRONG INFO 
 
                                 
                               
                                
                                      
                                            கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பின்தங்கியுள்ள வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள்  கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக, நேற்று தமிழக சட்டப்பேரவையில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பின்தங்கியுள்ள வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது. இது பாமகவின் 40 வருட போராட்டத்துக்கு கிடைத்த முதல் கட்ட வெற்றி ஆகும்.
தமிழகத்தில் மக்கள் தொகையில் பெரும் இனம் என்றால் அது வன்னியர் இனமே. அதற்கான சமூக நீதியை பெற்று தந்தால் மட்டுமே அதிமுகவுடன் கூட்டணி என்று பாமக அறிவித்து இருந்தது. தற்போது வன்னியர்களுக்கு என்று 10.5 % உள்ஓதுக்கீடு உறுதியாகிதை அடுத்து அதிமுக - பாமக கூட்டணியும் உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து கருது தெரிவித்துள்ளார். அதில், "எல்லா சமூகங்களுக்கும் சரியான இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால்,  அவசரகதியில் வன்னியர்களுக்கு 6 மாதங்களுக்கு தற்காலிக உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பது தேர்தலுக்காக தான் என்பது எல்லாருக்குமே வெளிப்படையாக தெரிகிறது. 
 109 சமூகங்களை உள்ளடக்கிய MBC பிரிவில் எந்த சமூகமும் பாதிக்கப்படாத அளவிற்கு இட ஒதுக்கீட்டினை முறையாக வழங்குவதுதான் சரியான சமூக நீதியாக இருக்க முடியும். 
எதற்காக இந்த அவசர கோலம்? வன்னியர் உள் ஒதுக்கீட்டினை ஆய்வு செய்ய இந்த அரசாங்கம் அமைத்த நீதிபதி குலசேகரன் கமிட்டி என்ன ஆனது? பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பைப்போல இதுவும் ஒரு கண்துடைப்புக்கான அறிவிப்பா? என்ற சந்தேகம் எல்லோரிடமும் ஏற்பட்டிருக்கிறது." என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் இந்த பதிவில் மிகப்பெரிய தவறு ஒன்று உள்ளது. "வன்னியர் உள் ஒதுக்கீட்டினை ஆய்வு செய்ய இந்த அரசாங்கம் அமைத்த நீதிபதி குலசேகரன் கமிட்டி என்ன ஆனது?" என்று அவர் கேட்டு இருப்பது மிகப்பெரிய தவறான தகவல் ஆகும்.
நீதிபதி குலசேகரன் தலைமையிலான கமிட்டி தமிழகத்தில் உள்ள அணைத்து சாதிகளையும் கணக்கெடுக்க அமைக்கப்பட்ட ஒரு கமிட்டி ஆகும். இது உச்சநீதிமன்றத்தில் நடந்துவரும் தமிழகத்தில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு எதிராக நடக்கும் ஒரு வழக்கின் காரணமாக அமைக்கப்பட்டுள்ளது.

(புகைப்படம்: தமிழக முதல்வரின் அறிக்கை. கமிட்டி எதற்காக அமைக்கப்பட்டு உள்ளது என்று தமிழக முதல்வர் தெளிவாக தெரிவித்து இருப்பார்)
ஏதோ நானும் கருத்து சொல்லுகிறேன் என்ற பெயரில் யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் ஒரு அரசியல் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் டிடிவி தினகரன் போன்றவர்கள் ஒரு தவறான தகவலை கூறுவது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.