தமிழக அரசுக்கு டி.டி.வி. தினகரன் வேண்டுகோள்! - Seithipunal
Seithipunal


ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த போராட்டத்தில் 18600 அரசு மருத்துவர்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் மட்டும்தான் குறைந்த சம்பளம் வழங்குவதாகவும், மேலும் கடந்த 10 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என அரசு மருத்துவர்கள் என குற்றம் சாட்டியுள்ளனர்.

எனவே, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் டுவிட்டரில் கூறியவை:-

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அதை கண்டுகொள்ளாததால், இன்று மாநிலம் முழுக்க புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில்லை என்ற போராட்டத்தை அறிவித்துள்ளது அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு .

இந்தப் போராட்டம் இதே மாதத்தில் மேலும் நான்கு நாட்கள் நடக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கி தலைமை மருத்துவமனை வரை நோயாளிகள் சிகிச்சை கிடைக்காமல் அவதிப்பட வாய்ப்புள்ளது.

எனவே நோயாளிகளின் அவதியையும் மருத்துவர்களின் பணி நலனையும் மனதில்கொண்டு, போராட்டம் நடத்தும் மருத்துவர்களை அரசு அழைத்துப்பேசி உரிய தீர்வு காண வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv dinakaran tweet about doctors strike


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->