திமுகவுக்கு தாவும் நிர்வாகிகள்.! திடீரென திமுக பக்கம் சாய்ந்த தினகரன்? - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டுக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி முதல் 13 நாட்கள் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது சுற்று பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று சென்னை திரும்பினார். அவருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இதனிடையே நேற்று இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட மு.க.ஸ்டாலின், வெளிநாடு சுற்றுலா சென்று திரும்பியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியில் பெறப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டு தமிழக மக்களுக்குப் பதில் சொல்லியாக வேண்டும் என்று கூறினார்.

இந்நிலையில், இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளருக்கு பேட்டி அளித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே தற்போதைக்கு கையெழுத்தாகி உள்ளது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் வெள்ளை மனதுடன்தான் வெள்ளை அறிக்கை கேட்கின்றது.

வெள்ளை மனதுடன் இருந்தால் முதலீடு குறித்து முதலமைச்சர் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றார். டிடிவி தினகரன், ஸ்டாலினுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இதற்கு முன்னதாக அமமுகவில் இருந்த முக்கிய புள்ளிகளான செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் சில முக்கிய புள்ளிகள் திமுகவில் இணைந்துள்ளனர். இந்நிலையில், திமுகவுக்கு ஆதரவாக தினகரன் பேசியிருப்பதும் மறைமுக விவாதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அரசியல் விமசனத்திற்கு உள்ளாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv dinakaran support for mk stalin


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->