கூட்டணியில் திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவுக்கு திரிணாமுல் முழு ஆதரவு.!! அதிர்ச்சியில் திமுக.!! - Seithipunal
Seithipunal


மத்திய பாஜக அரசுக்கு எதிராக 28 எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள இண்டியா கூட்டணியில் காங்கிரஸ், திமுக மற்றும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது.

இருப்பினும் மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தனித்து போட்டியிடுகின்றன. 

இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநில தலைவர் கலைவாணன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்திய அளவில் உருவாகியுள்ள இண்டியா கூட்டணியில் திமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடம் பெற்றுள்ள நிலையில் தமிழகத்தில் கூட்டணி கட்சியான திமுகவுக்கு ஆதரவளிக்காமல் அதிமுகவுக்கு ஆதரவாளித்திருப்பதால் திமுக தரப்பு அதிர்ச்சியில் உறைந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trinamul Congress support AIADMK in loksabha election in tn


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->