நாளை நமதே! வென்று காட்டுவோம்! வெற்றி நிச்சயம்! - சசிகலா - Seithipunal
Seithipunal


சசிகலா செங்கோட்டையன் குறித்த அறிக்கை வெளியிட்டுள்ளதில் குறிப்பிட்டதாவது,"அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.தி.மு.க) பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். துவங்கி, புரட்சித்தலைவி அம்மா வளர்த்தும், ஏழை, எளிய மக்களுக்காக உருவான மாபெரும் இயக்கம்.

புரட்சித்தலைவி கூறியதுபோல், "இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் இயக்கம் மக்களுக்காகவே இயங்கும்."கழக மூத்த முன்னோடியும் சட்டமன்ற உறுப்பினருமான செங்கோட்டையன் பல நெருக்கடியான காலகட்டங்களிலும் தனது உடம்பில் இயக்கத்தின் இரத்தத்தை ஓட்டியவர்.

அவரைப் போன்ற உண்மையான தொண்டர்கள் இருக்கும் வரை, தீமையான திமுக முயற்சிகள் எதுவும் வெல்ல முடியாது.இருபெரும் தலைவர்கள் உருவாக்கிய அ.தி.மு.க ஒரு காட்டாற்று வெள்ளம் போல், ஒன்றுபட்டால் எந்த சக்தியும் தடுப்பதில்லை.

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மக்கள் விரோத அரசு வீடுகளுக்கு அனுப்பப்படுவது உறுதி. வலிமைமிக்க, ஒன்றுபட்ட அ.தி.மு.க தான் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட வழிவகை செய்யும்.
ஒன்று படுவோம்! வென்று காட்டுவோம்!
நாளை நமதே! வெற்றி நிச்சயம்!
பேரறிஞர் அண்ணா நாமம் வாழ்க!
புரட்சித்தலைவர் நாமம் வாழ்க!
புரட்சித் தலைவி அம்மா நாமம் வாழ்க!
நன்றி
வணக்கம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tomorrow is ours We will win Victory is certain Sasikala


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->