இன்று சசிகலாவை சந்திக்கும்..ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர்.! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுகவில் சசிகலாவை மீண்டும் சேர்த்துக் கொண்டு கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் அத்தீர்மானம் ஓ.பன்னீர் செல்வத்திடம் நிர்வாகிகள் வழங்கியதாகவும் தகவல் வெளியாகியது.

இதனால் அதிமுகவினரிடையே சலசலப்பு ஏற்பட்டது. மேலும் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவாரா.? என்ற எதிர்பார்ப்பு அதிமுக தொண்டர்கள் இடையே எழுந்துள்ளது.

இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ராஜா இன்று சசிகலாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே சசிகலாவை சேர்க்கக்கோரி அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டு வரும் நிலையில் இன்று ஓபிஎஸ்ன் சகோதரர் சசிகலாவை சந்திக்க உள்ளதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் ஒட்டுமொத்த அதிமுக முடிவுக்காக காத்திருக்கிறேன் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today O panneerselvam meet sasikala


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->