அதிமுகவின் முக்கிய பதவிகளுக்கான தேர்தல்.. இன்று முதல் வேட்பு மனு தாக்கல்.!! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கான தேர்தல் வருகின்ற டிசம்பர் 7ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அதிமுக தலைமை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் வேட்புமனு தாக்கல், நாளை மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. வேட்புமனு மனுக்கள் 5ஆம் தேதி காலை பரிசீலிக்கப்படும். 6 ஆம் தேதி மாலை 4 மணி வரை மனுவை திரும்பப் பெறலாம் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. டிசம்பர் 7ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறும்.

வாக்கு எண்ணிக்கை நடத்தி, டிசம்பர் 8ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்திலுள்ள ஒன்றியத்திற்கு உட்பட்ட கிளை கழக நிர்வாகிகள், பேரூராட்சி மற்றும் நகர வார்டு கழக நிர்வாகிகள், நகராட்சி வட்ட கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகள் டிசம்பர் 13ஆம் தேதி முதல் 23ம் தேதி வரை இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

today admk party election nomination filed


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->