தமிழகத்தின் அடுத்த ஆட்சி? வெளியான கருத்துக்கணிப்பு முடிவு.! - Seithipunal
Seithipunal


நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பது குறித்து கருத்துக் கணிப்புகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், 122 இடங்களைக் கைப்பற்றி அதிமுக-பாமக-பாஜக கூட்டணி மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று, ஜனநாயக கூட்டமைப்பு (Democracy Network) மற்றும் உங்கள் குரல் அமைப்பின் கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.

தமிழகம் முழுவதும் சுமார் 80 ஆயிரம் பேரிடம் இந்த ஜனநாயக கூட்டமைப்பு மற்றும் உங்கள் குரல் அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள் வெளியாகி உள்ளது. அதன்படி,

* அதிமுக பாமக பாஜக கூட்டணி தமிழகத்தில் 122 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* திமுக காங்கிரஸ் கூட்டணி 111 இடங்களைப் பெற்று எதிர்க்கட்சியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒரு இடத்தில் வெற்றி பெரும் என்று இந்த கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

* இதேபோல் மக்கள் நீதி மையம் கூட்டணி, நாம் தமிழர் கட்சிகளும் ஒரு இடங்களில் கூட வெற்றி பெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணி மீண்டும் ஆட்சியை அமைப்பதற்கு உண்டான முக்கிய காரணமாக கொங்கு மண்டலம் வழிவகுக்கும் என்று இந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

கடந்த 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முதல் ஜனநாயக கூட்டமைப்பு மற்றும் உங்கள் குரல் தன்னார்வ அமைப்பு தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகிறது.

கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த அமைப்பு வெளியிட்ட கருத்துக் கணிப்பு துல்லியமாக இருந்ததன் காரணமாக, நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் இதன் முடிவுகளின்படி இருக்கலாம் என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn poll march


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->