தமிழகத்தில் நாளை பேருந்துகள் ஓடாது.! எச்சரிக்கையை மீறி வெளியான அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நாளை தமிழகம் முழுவதும் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தொழிலார் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்தில் தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., எச்.எம்.எஸ்., டி.டி.எஸ்.எப்., எம்.எல்.எப்., ஏ.ஏ.எல்.எல்.எப்., டி.டபிள்யூ.யு. ஆகிய தொழிற்சங்கங்கள் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

நாளை நடைபெற உள்ள வேலை திமுக அதன் கூட்டணி கட்சிகளின் போக்குவரத்து கழக தொழிலார்களின் வேலை நிறுத்தத்தை சமாளிப்பதற்காக தமிழக அரசு முன்னேற்பாடுகளை எடுத்து வருகிறது. அதன்படி, தமிழக அரசுக்கு ஆதரவாக உள்ள அண்ணா தொழிற்சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம், பாரதிய ஜனதா கட்சிகளின் தொழிற்சங்கங்களில் உள்ள ஊழியர்கள் மூலம் பேருந்துகளை இயக்க தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவித்த நிலையில் தமிழக அரசு நாளைக்கு பணிக்கு வரவில்லை என்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டு பணிக்கு வராதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஏற்கனவே விடுமுறை எடுத்து இருந்தாலும் நாளை கண்டிப்பாக பணிக்கு திரும்பவேண்டும் என்றும், தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், நாளை திட்டமிட்டப்படி வேலை நிறுத்தம் நடைபெறும் என்று தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., எச்.எம்.எஸ்., டி.டி.எஸ்.எப்., எம்.எல்.எப்., ஏ.ஏ.எல்.எல்.எப்., டி.டபிள்யூ.யு. ஆகிய தொழிற்சங்கங்கள் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். நாளை தமிழகத்தில் பேருந்துகள் ஓடுமா., ஓடாத., என்பது நாளை தான் தெரியும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN GOVT BUS Staffs


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->