ஓ பன்னீர்செல்வத்திற்கு அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி நாளை மறுநாள் முதல் தொடர்கிறது. 2023 மார்ச் 31ம் தேதிக்குள் இப்பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது. 

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் நாளை மறுநாள் ஆலோசனை நடத்த உள்ளனர். சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தலைமையிலும், மாவட்டங்களில் தலைமை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தலைமைகளும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. 

இந்நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆகஸ்ட் 1ம் தேதி தேர்தல் ஆணையம் கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் பொள்ளாச்சி ஜெயராமன்,ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். இதனால் ஓ பன்னீர்செல்வம் தரப்பு அதிர்ச்சியில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn election officer call to eps team


கருத்துக் கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்?Advertisement

கருத்துக் கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்?
Seithipunal