உலகத்தை திரும்பி பார்க்கவைத்த கொடைக்கானல் விஞ்ஞானி டாக்டர்.அழகர்சாமி .! தமிழக முதல்வர் வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் ஸ்டேன்போர்டு பல்கலை வெளியிட்டுள்ள உலகளவில் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் (பார்மஸி துறை), தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி டாக்டர்.அழகர்சாமி இடம் பிடித்துள்ளார்.

தமிழகத்தின் கொடைக்கானல் - பண்ணைக்காடு பகுதியைச் சேர்ந்த விஞ்ஞானி டாக்டர்.அழகர்சாமி அவர்கள், அமெரிக்காவின் ஸ்டேன்போர்டு பல்கலை வெளியிட்டுள்ள உலகளவில் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் (பார்மஸி துறை) இடம்பிடித்து உள்ளார்.

இந்நிலையில், தமிழகத்தின் பெருமையை உலக அரங்கில் உயர்த்திய கொடைக்கானல் - பண்ணைக்காடு பகுதியைச் சேர்ந்த விஞ்ஞானி டாக்டர்.அழகர்சாமி அவர்களுக்கு, தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 

"அமெரிக்காவின் ஸ்டேன்போர்டு பல்கலை வெளியிட்டுள்ள உலகளவில் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் (பார்மஸி துறை) இடம்பிடித்து தமிழகத்தின் பெருமையை உலக அரங்கில் உயர்த்திய கொடைக்கானல் - பண்ணைக்காடு பகுதியைச் சேர்ந்த விஞ்ஞானி டாக்டர்.அழகர்சாமி அவர்களுக்கு எனது பாராட்டுக்களும், வாழ்த்துகளும்." என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn cm wish to Dr azhagarsamy


கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..
கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..
Seithipunal