"திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது" - முதல்வர் ஸ்டாலின் ட்வீட்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநில பொது தேர்தல் கடந்த மே 10ம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றது. கர்நாடக மாநிலம் முழுவதும் 36 மையங்களில் 306 அறைகளில் 4,258 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது.

கர்நாடக மாநிலத்தில் பொதுத் தேர்தல் முடிவு நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் 137 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. அதில் தற்பொழுது வரை 82 தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளது.ர்நாடகாவை ஆளும் பாஜக 63 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.

இதன் மூலம் தென்னிந்தியாவில்  ஒரு மாநிலத்தில் கூட பாஜக ஆட்சியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தென்னிந்திய மாநிலங்களில் கர்நாடகாவில் மட்டுமே பாஜக ஆட்சி அமைத்திருந்தது.

இதனையடுத்து தமிழக முதல்வரும் திமுக கட்சி தலைவருமான மு க ஸ்டாலின் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் "கர்நாடகத்தில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துகள். 

கர்நாடக மக்கள் வாக்களித்தபோது, நியாயப்படுத்த முடியாத வகையில் சகோதரர் ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்றத்தில் இருந்து பதவிநீக்கம் செய்தது, நாட்டின் முதன்மைப் புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தியது, இந்தித் திணிப்பு, பெருமளவிலான ஊழல் என அனைத்தும் அவர்கள் மனதில் எதிரொலித்திருக்கிறது. பா.ஜ.க.வின் பழிவாங்கும் அரசியலுக்குத் தக்க பாடம் புகட்டி அவர்கள் தங்கள் கன்னடிகப் பெருமிதத்தை நிலைநிறுத்தியுள்ளனர்.

திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. அடுத்து, 2024 பொதுத்தேர்தலிலும் வெல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்! இந்தியாவில் மக்களாட்சியையும், அரசியலமைப்பு விழுமியங்களையும் மீட்போம்!" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN CM MK Stalin tweet about BJP not in south india


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->