ஊழல் வழக்கில் ஆளும் கட்சியின் இளைஞரணி தலைவர் கைது! - Seithipunal
Seithipunal


மேற்கு வாங்க மாநிலத்தின் ஆசிரியர் பணி நியமன ஊழலில் ஈடுபட்டதாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் குந்தல் கோஷை அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆசிரியர் பணி நியமனங்களில் ஊழலில் ஈடுபட்டது தொடர்பாக விசாரணை நடத்தியதில், விசாரணை அதிகாரிகளுக்கு சரியான ஒத்துழைப்பு தர மறுத்ததால், குந்தல் கோஷை இன்று காலை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்

நேற்று காலை இந்த வழக்கு சம்மந்தமாக கோஷின் இரட்டை அடுக்குமாடிக் குடியிருப்பில் அமலாக்கப் பிரிவினர் நடத்திய சோதனையில் பல ஆவணங்கள் மற்றும் ஒரு டைரி கைப்பற்றப்பட்டது. 

தொடர்ந்து, அமலாக்கத் துறையினர் கோஷின் சினார் பார்க்கில் உள்ள குடியிருப்பில் இரவு முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுத்த காரணத்தினால் குந்தல் கோஷை இன்று காலை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். 

இன்று நகர நீதிமன்றத்தில் குந்தல் கோஷ் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும், ஆசிரியர் பணி நியமன ஊழலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் கோஷுக்கு சிபிஐ அதிகாரிகளால்  சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TMC youth Wing leader arrest


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->