தீயாய் பரவும் வீடியோ.."காங்கிரஸ்" ஆட்சி அமைந்தால்.. நீதிபதியின் நாக்கை அழிப்போம்..!! காங்கிரஸ் நிர்வாகியின் சர்ச்சை பேச்சு..!! - Seithipunal
Seithipunal


நீதிபதியின் நாக்கை அறுப்போம் என பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்..!!

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது கர்நாடகாவின் கோலார் பகுதியில் 2019 ஏப்ரல் 13-ம் தேதி நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி "ஏன் அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டுள்ளனர். நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவது ஏன்?" என விமர்சனம் செய்தது சர்ச்சை ஏற்படுத்தியது. இது தொடர்பாக குஜராத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி சூரத் தலைமை நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.

இந்திய குற்றவியல் சட்டம் 499, 500 ஆகிய பிரிவுகளின் கீழ் ராகுல் காந்தி மீது விசாரணை நடைபெற்றது. கடந்த 2021 ஜூன் மாதம் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். சுமார் 4 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கில் கடந்த மார்ச் 17-ம் தேதி இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

மார்ச் 23-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எச்.எச் வர்மா அறிவித்திருந்தார். இருதரப்பு இறுதி வாதங்களையும் கேட்ட நீதிபதி வர்மா ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதித்தார். இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி தரப்பில் ஜாமீன் கோரப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி வர்மா ராகுல் காந்திக்கு 30 நாள் ஜாமீன் வழங்கி அதுவரை தண்டனையை நிறுத்திவைக்க உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் ராகுல் காந்திக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஆளும் பாஜக அரசு அதானி குழுமம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியதால் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் காங்கிரஸ் கட்சியின் எஸ்சி எஸ்டி பிரிவு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் மாநகர் மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் பேசியதாவது "இந்த நாட்டிற்காக உயிரைக் கொடுத்த இயக்கம் என்று சொன்னால் அது எங்கள் காங்கிரஸ் பேரியக்கம் தான்.

அப்படி ஒரு காங்கிரஸ் பேரியக்கத்தில் இருந்த எங்கள் அருமைத் தலைவர் ராகுல் காந்தியின் மீது மார்ச் 23ஆம் தேதி சூரத் நீதிமன்றத்திலே எச்.எச் வர்மா என்ற நீதிபதி அவர்கள் என் தலைவனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து இருக்கிறார். எச் வர்மா நீதிபதி அவர்களே எங்கள் ஆட்சி வரும், எங்கள் ஆட்சி வந்தால் உங்கள் நாக்கை அறுப்போம்.

எங்கள் தலைவன் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை வழங்கிய உனது நாக்கை அறப்போம். யாரைப் பார்த்து சிறை தண்டனை வழங்கி இருக்கிறீர்கள். இந்த நாட்டிற்கு சுதந்திரத்தை பெற்று கொடுத்தது யார்..?" என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Threatened to cut judge tongue who sentenced Rahul Gandhi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->